Home /News /live-updates /

புதுச்சேரி: 78 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்..

புதுச்சேரி: 78 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்..

புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரியில் 78 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் 78 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் மார்ச் 21-ம் தேதிமுதல் பொதுமக்களின் வழிபாட்டிற்கு தடை செய்யப்பட்டது. இன்றுவரை அனைத்து கோவில்களிலும் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்தன.

இந்நிலையில் 5 கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள்  பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதுச்சேரியின்  புகழ்பெற்ற  மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் வருகையை ஒட்டி அவர்கள் கடைபிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகளை அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளனர்.

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க  தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.. மணக்குள விநாயகர் கோவிலில் இன்று காலை ஆறு மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 6 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அரசின் வழிகாட்டுதல்படி அனைத்து பக்தர்களும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், கோவில்களின் வருவோருக்கு உடல் வெப்பநிலை சோதித்து பார்க்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பக்தர்களுக்கு கையில் விபூதி,குங்குமம் அளிக்கப்படவில்லை.மாறாக தனியாக அவை கவரில்  வைக்கப்பட்டுள்ளன.அதனை பக்தர்கள் எடுத்து செல்கின்றனர்.

மூலவர் தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில் மற்றும் தேவாலயங்களில் புனிதநீர் மற்றும் அன்னதானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் சாமி தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பக்தர்கள் தற்போது சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதேபோன்று தேவாலயம் மற்றும் தர்காக்களில் அவர்கள் மத வழிபாடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Also read... கோரக்நாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Pondicherry, Puducherry

அடுத்த செய்தி