ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை! - முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை! - முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை

இதில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 17ம் தேதி கூடவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவியை ரயிலில் தள்ளி கொலை : இளைஞர் நள்ளிரவில் கைது!

மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும்  சட்ட மசோதாவும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கும் முதலமைச்சர், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published: