Home /News /live-updates /

தேசிய கீதத்தை முழுமையாக  பாடினால் NOC வழங்கும் காவல் நிலையம்..

தேசிய கீதத்தை முழுமையாக  பாடினால் NOC வழங்கும் காவல் நிலையம்..

தேசிய கீதம் பாடிய இளைஞருக்கு NOC வழங்கிய காவலர்கள்

தேசிய கீதம் பாடிய இளைஞருக்கு NOC வழங்கிய காவலர்கள்

தேசிய கீதத்தை முழுமையாக  பாடிய பிறகு தான் புதுச்சேரியில் இளைஞருக்கு தடையில்லா சான்றிதழை காவல் நிலைய ஆய்வாளர் வழங்கியுள்ளார்.

தேசிய கீதத்தை முழுமையாக  பாடிய பிறகு தான் புதுச்சேரியில் இளைஞருக்கு தடையில்லா சான்றிதழை காவல் நிலைய ஆய்வாளர் வழங்கியுள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சாமிப்பிள்ளை தோட்டத்தில் பகுதியில் வசிப்பவர் விக்னேஷ். பிகாம் பட்டதாரியான இவர் தனியார் வங்கியில் வேலையில் சேர்வதற்கு தன் மீது வழக்கு இல்லாத தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கிட காவல்நிலையத்தில் மனு செய்திருந்தார்.

அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணன் தடையில்லா சான்றிதழ் தர வேண்டும் எனில் தேசிய கீதத்தை ஒருமுறை தடையின்றி பாடுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் அந்த இளைஞர் முறையாக பாடவில்லை. அதனால் சான்றிதழ் வழங்க ஆய்வாளர் மறுத்துவிட்டார்.

Also read... ஊரடங்கால் உறங்கும் ஐ.டி. நிறுவனங்கள்... 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் - உண்மை நிலவரம் என்ன?

மறுநாள் வந்த அந்த இளைஞர் தேசிய கீதத்தை முழுமையாக பாடினார். இதைத்தொடர்ந்து அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி