புதுச்சேரியில் 7 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வாரச் சந்தை

புதுச்சேரியில் 7 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வாரச் சந்தை

சந்தை

புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெய்த கனமழையால் சேறும் சகதியுமாக சந்தை காட்சி அளிப்பதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியின் மதகடிப்பட்டு கிராமத்தில் பிரெஞ்சு காலத்திலிருந்தே மிகவும் புகழ்பெற்றது மாட்டு சந்தை ஆகும். வாரந்தோறும்  செவ்வாய்க்கிழமை மட்டுமே இந்த சந்தை செயல்படும். இங்கு புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் இருந்து மாடு வாங்குவோர் வருகை தருவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றது. நாட்கள் ஆகஆக இந்த சந்தை, அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்படும் சந்தையாக மாறியது.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக, இந்த சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சந்தை கூடுவதற்கு மாநில அரசு தளர்வை அளித்துள்ளது. இதையடுத்து  7 மாதங்களுக்கு பிறகு மதகடிப்பட்டு சந்தை மீண்டும் கூடியது.

Also read... கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத தனிநபர், நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்குகடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, இந்த சந்தை முழுவதும், ஆங்காங்கே மழை நீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் இங்கு, சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால், விற்பனை குறைவாக உள்ளதாக, வாரச்சந்தை வியாபாரிகள் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சந்தை செயல்படுவதற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கூறி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதால், தேங்கிய மழைநீர் பகுதிகளிலேயே தற்போது சந்தை கூடியுள்ளது. இதனை அரசு உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என அங்குள்ள வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: