விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க அரசு தயாராக உள்ளது! - பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாயிகள் விவகாரத்தில் இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என்றும், விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 • Share this:
  வேளாண் சட்டங்கள் குறித்து அரசின் பரிந்துரையை விவசாயிகள் பரிசீலிக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், திங்கள்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம், காணொலி வழியாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சிவசேனா எம்பி விநாயக் ராவத், சிரோன் மணி அகாலிதளத்தை சேர்ந்த பல்வீந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாயிகள் விவகாரத்தில் இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என்றும், விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அரசின் பரிந்துரை கிடப்பில் உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, அதுபற்றி விவசாயிகளிடமும், ஆதரவாளர்களிடமும் விவரிக்க வேண்டும் என, அனைத்து கட்சி தலைவர்களை கேட்டுக் கொண்டார். பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

  End of Visuals

  https://twitter.com/ANI/status/1355437273710436353

  இந்நிலையில், டெல்லி வன்முறை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கலிபோர்னியாவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது பெரிய அவமானம் என்றும், இச்சம்பவத்துக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

  இந்த கூட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவது மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக திமுக தனிக்கட்சியாக போராடும் என்றும் உறுதிபடக் கூறினார்.
  Published by:Ram Sankar
  First published: