நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் 2

நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் 2
  • Share this:
சுமார் 2650 கிமீ. உயரத்தில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பியுள்ளது. அந்த படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஜூலை 22-ல் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த 20-ம் தேதி நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைந்தது.
சந்திரயான் 2 செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணி அளவில் நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்த போது அவர் இந்த தகவலை கூறினார். மேலும் சந்திரயான் தரையிரங்கும் போது அதை நேரடியாக பார்வையிட பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் வருவது குறித்த தகவல் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை எனவும் சிவன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் சந்திரயான் 2 தற்போது சந்திரனை சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருவதாகவும், அடுத்தகட்டமாக சுற்றுவட்ட பாதைக்கு சந்திரயான் 2 -ஐ கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் நிலவின் பரப்பை சந்திரயான் 2 விண்கலம் படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த முதல் படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நிலவின் பரப்பில் இருந்து 2650 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்