மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதில் அரிசி, பணம் வழங்கிய கல்வி துறை

மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதில் அரிசி, பணம் வழங்கிய கல்வி துறை

மேகாதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது - முதலமைச்சர் பழனிசாமி

  • News18
  • Last Updated :
  • Share this:
மதிய உணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி, ரொக்கத்தொகை  வழங்கும் பணி இன்று தொடங்கியது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு மூலம் தரப்படும் மதிய உணவு தரமுடியாத சூழல் உருவானது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் மதிய உணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசியும், உணவு பாதுகாப்பு ஊக்கத்தொகை இன்று முதல் அவரவர் படிக்கும் பள்ளிகளில் தரப்படுகிறது.

காலை 10 முதல் மதியம் 1 வரையிலும், மதியம் 2 முதல் மாலை 4 வரையிலும் அரிசி, சமைப்பதற்கான செலவின ரொக்க தொகை வழங்கப்பட்டது.முதல்கட்டமாக இன்று  1, 2ம் வகுப்புகளுக்கும், வரும் நாளை தேதி 3, 4ம் வகுப்புகளுக்கும், 17ம் தேதி 5,6ம் வகுப்புகளுக்கும், 18ம் தேதி 7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் தரப்பட உள்ளது.Also read... தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியது புதுவை மத்திய பல்கலைக்கழகம்!

அரசு பள்ளிகளில் முந்தைய கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படித்த குழந்தைகளின் பெற்றோர் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று அரிசி, ரொக்கத்தை பெறுகின்றனர்.

இதை பெற ரேஷன்கார்டு, ஆதார் கார்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பிக்கின்றனர். 1 முதல் 5ம் வகுப்பு படித்தோருக்கு 4 கிலோ அரிசி, ரூ. 290 ரொக்கமும், 6 முதல் 8ம் வகுப்பு வரை படித்தோருக்கு 4 கிலோ அரிசி, ரூ. 390 ரொக்கமும் முதல் தவணையாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா காலத்தில் கஷ்டப்படும் ஏழைகளூக்கு இது பேரூதவி என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: