டி.டி.வி.தினகரனுடன் மோதல்! தங்க தமிழ்ச் செல்வன் நாளை தி.மு.கவில் இணைகிறார்

இதற்கிடையில், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், தேனி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளுடன் தங்க தமிழ்செல்வனுக்கு தெரியாமல் தனியாக கூட்டம் நடத்தியுள்ளார்.

news18
Updated: June 27, 2019, 7:30 PM IST
டி.டி.வி.தினகரனுடன் மோதல்! தங்க தமிழ்ச் செல்வன் நாளை தி.மு.கவில் இணைகிறார்
தங்க தமிழ்செல்வன்
news18
Updated: June 27, 2019, 7:30 PM IST
டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தங்க தமிழச் செல்வன் நாளை தி.மு.கவில் இணையவுள்ளார். 

 அ.ம.மு.க மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட மகேந்திரன் ஆகியோர் உட்பட அ.ம.மு.கவினர், தங்கதமிழ்செல்வன் தலைமையில் அ.தி.மு.கவில் இணைய உள்ளதாகவும், விரைவில் தேனிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் தனது ஆதரவாளர்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், தேனி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளுடன் தங்க தமிழ்செல்வனுக்கு தெரியாமல் தனியாக கூட்டம் நடத்தியுள்ளார்.


அதனால், ஆத்திரமடைந்த தங்க தமிழ்ச் செல்வன், டி.டி.வி.தினகரனை கடுமையாக திட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதனையடுத்து, தங்க தமிழ்ச் செல்வனை கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக நேற்று டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இந்தநிலையில், தங்க தமிழ்ச் செல்வன் மீண்டும் அ.தி.மு.கவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு, தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நாளை காலையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச் செல்வன் தி.மு.கவில் இணையவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

 #BREAKING

Loading...
Also see:

First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...