முகப்பு /செய்தி /சற்றுமுன் / Thalapathy 65 Update - விஜய்க்கு ஜோடியானார் பூஜா ஹெக்டே

Thalapathy 65 Update - விஜய்க்கு ஜோடியானார் பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • Last Updated :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்திருக்கும் நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய்.

இத்திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.

பிரபாஸ் உடன் ராதே ஸ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது 8 வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்திருந்த நடிகை பூஜா ஹெக்டே “மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று பல நாட்கள் நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அது நடந்தால் மகிழ்ச்சி. விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவரின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.

top videos
    First published:

    Tags: Actor vijay, Kollywood