மீண்டும் திறக்கப்பட்ட தாய்லாந்து குகை... ஒரே நாளில் 2000 பேர் பார்த்து ரசித்தனர்

மீண்டும் திறக்கப்பட்ட தாய்லாந்து குகை... ஒரே நாளில் 2000 பேர் பார்த்து ரசித்தனர்
  • News18
  • Last Updated: November 3, 2019, 9:08 AM IST
  • Share this:
தாய்லாந்தின் தாம் லுவாங் குகை  தற்போது  பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

தாய்லாந்தில் தாம் லுவாங் குகைக்குள் சாகசப் பயணம் மேற்கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும்  திடீர் மழை வெள்ளத்தால் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி  சிக்கிக்கொண்டனர். 2 வாரங்களுக்கும் மேலாக குகைக்குள் சிக்கியிருந்த அவர்களை மீட்கும் பணியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

தாய்லாந்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து 17 நாள் போராட்டத்திற்கு பின் குகையினுள் சிக்கிய சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட்டனர்


இதையடுத்து மூடப்பட்டிருந்த அந்த குகை தற்போது பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குகையை பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். புத்த மத துறவிகளும் சிறுவர்கள் சிக்கி தவித்த குகையை பார்வையிட்டனர்.

குகை திறக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 2000-த்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டதாகவும் அவர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also watch
First published: November 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்