• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • சென்னையில் பயங்கரம்.. சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட வாய்தகராறு கொலையில் முடிந்தது..

சென்னையில் பயங்கரம்.. சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட வாய்தகராறு கொலையில் முடிந்தது..

கொல்லப்பட்டவர்

கொல்லப்பட்டவர்

தன் வீட்டின் எதிரே சிறுநிர் கழித்தை பார்த்து சீனிவாசன் தகாத வார்த்தைகளால்  ராஜேந்திரனை திட்டியதால் பதிலுக்கு ராஜேந்திரனும் திட்டியுள்ளார்.

  • Share this:
    பல்லாவரம் அருகே வீட்டின் அருகே சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்தது.

    சென்னை பல்லாவரம் அடுத்தஅனகாபுத்தூர் கரிகாலன் நகர், செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது-70) இவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 10:9:21 அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் ராஜேந்திரன் வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுவிட்டு இரவு 8:00மணி அளவில் வீடு திரும்பினார்.

    அப்போது ராஜேந்திரனுக்கு அவசரமாக சிறுநீர் வந்தால் அவரின் வீட்டின் அருகே சிறுநீர் கழித்துள்ளார். அந்த நேரத்தில் ராஜேந்திரன் வீட்டின் அருகே வசித்து சென்ட்ரிங் வேலை செய்து வரும் சீனிவாசன் (வயது-55) என்பவர் வீட்டின் வெளியே வந்தபோது தன் வீட்டின் எதிரே சிறுநிர் கழித்தை பார்த்து சீனிவாசன் தகாத வார்த்தைகளால்  ராஜேந்திரனை திட்டியதால் பதிலுக்கு ராஜேந்திரனும் திட்டியுள்ளார்.

    இதனால் கோபமடைந்த சீனிவாசன் அங்கிருந்த உருட்டு கட்டையை எடுத்து ராஜேந்திரனை தலையில் சரமாரியாக தாக்கியதில் ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அலரல் சத்தத்துடன் கீழே விழுந்ததும் உடனே சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேந்திரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    Also read:  கொள்ளையடித்த பணத்தில் இரண்டு மனைவிகளை சொகுசு வாழ்க்கை வாழவைத்த பலே கில்லாடி!

    மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் ஏழு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி கடந்த 17 ஆம் தேதி அன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் தலைமறைவாக இருந்த சீனிவாசனை கைது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Also read:  அசாம் அமைச்சரின் மருமகன் எனக்கூறி ₹1.25 கோடி மோசடி செய்த நபர் நிர்வாணமாக்கி மிரட்டல்!

    சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட வாய்தகாறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனகாபுத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து சங்கர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கலாம் என்கின்றனர் பொது மக்கள்.

    சுரேஷ் -செய்தியாளர், சென்னை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: