பழுது பார்த்து தயார் நிலையில் வைக்க உத்தரவு - அரசுப் பேருந்து சேவை எப்போது தொடங்கும்?
பேருந்துகளில் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது

கோப்புப்படம்
- News18
- Last Updated: May 26, 2020, 2:36 PM IST
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு பிறகு பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. குறிப்பாக மழை, வெள்ளம், இயற்கை சீற்றம் என எந்த தடை வந்தாலும் சேவையை தொடரும் அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
தற்பொழுது மே 31-ம் தேதிக்குப் பிறகு அரசு பேருந்துகள் இயக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் .
அதன் அடிப்படையில் ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடங்கப்பட உள்ள பேருந்து சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. அதிக அளவில் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற நிலையில் பேருந்துகளை முன்கூட்டியே அதற்காக தயார்ப்படுத்தி வைக்க அந்தந்த பணிமனைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாளாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை பழுதுபார்த்து பேருந்துகள் முழுமையாக தயார் செய்யக் கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
33 சதவீத போக்குவரத்து ஊழியர்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், அதிக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால், விரைவில் 70 சதவீத பணியாளர்கள், பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளுக்கு எத்தனை நபர்கள் நிற்க வேண்டும், எத்தனை நபர்கள் அமர்ந்து இருக்க வேண்டும்
தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தற்பொழுது மே 31-ம் தேதிக்குப் பிறகு அரசு பேருந்துகள் இயக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் .
அதன் அடிப்படையில் ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடங்கப்பட உள்ள பேருந்து சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. அதிக அளவில் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.