தமிழகத்தில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

கோப்புப் படம்

Corona Virus Update

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று புதிததாக 743 பேர் பாதிக்க்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இன்று 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மஹாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்பிய 83 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸால் இன்று 3 பேர் பலியாகி உள்ள தமிழகத்தில் மொத்தம் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 987 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5882 ஆக உயர்ந்துள்ளது.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published: