முகப்பு /செய்தி /Live Updates / தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு: வரும் ஞாயிறன்று 3வது தடுப்பூசி முகாம்!

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு: வரும் ஞாயிறன்று 3வது தடுப்பூசி முகாம்!

மெகா தடுப்பூசி முகாம்

மெகா தடுப்பூசி முகாம்

வரும் 26ம் தேதி (ஞாயிற்றுகிழமை) மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தவுள்ளது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் ஞாயிற்றுகிழமை மூன்றாவது தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.  அன்றைய தினம் 43 ஆயிரத்து 51 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. 20 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனையும் கடந்து 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல் மெகா தடுப்பூசி முகாமுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பையடுத்து மீண்டும் தடுப்பூசி முகாமை நடத்த முடிவு செய்த தமிழக அரசு, கடந்த 19ம் தேதி இரண்டாவது தடுப்பூசி முகாமை நடத்தியது. இதில், 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனையும் கடந்து 16.43லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: தாழ்த்தப்பட்டோருக்கு 61.75%, உயர்ஜாதி ஏழைகளுக்கு 47.75% கட் ஆப்: எஸ்.பி.ஐ வங்கிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

இதையடுத்து வரும் 26ம் தேதி (ஞாயிற்றுகிழமை) மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தவுள்ளது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.  அண்டை மாநிலங்களை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த மேகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, News On Instagram, Tamilnadu