Home /News /live-updates /

50 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது...

50 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது...

நேற்றைய பாதிப்பு 1051 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்ததுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம்தேதி 890 ஆக பதிவாகி இருந்தது. அதன்பின்னர் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி, ஜனவரி 21-ம்தேதி ஒருநாள் பாதிப்பு 30,178 என்ற உச்சத்தை அடைந்து பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்புகள் கடுமையாக உயர்ந்தன. இதையடுத்து முன்பைப் போல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வார இறுதி நாட்களில் ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.

    ஜனவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தற்போது மாஸ்க் அணிதல், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை தவிர மற்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க - சென்னையில் மிகவும் குறைந்த வாக்குப் பதிவு: காரணம் என்ன?

    இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1051 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் 3,172 பேர் சிகிச்சைக்கு குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 91 ஆயிரத்து 041 ஆக உயர்ந்துள்ளது.

    இதையும் படிங்க - அது நம்ம பஸ் டயரான்னு பாருங்க.. ஷாக்கான பயணிகள் - ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்

    கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,983 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,164 ஆக குறைந்துள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்காக 2,987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona

    அடுத்த செய்தி