உதயசூரியன் சின்னம் இல்லை, தனி சின்னம் தான் - இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சி அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஏணி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொகதீன் தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கி உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக கட்சிகள் தொடங்கி உள்ளன.

  திமுக தனது கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

  இதை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாங்கள் திமுக-விடம் 5 தொகுதிகள் கேட்டோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதையே தற்போதும் கேட்டோம். ஆனால் தற்போது மற்ற கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டியுள்ளதால் 3 தொகுதி மட்டுமே எங்களுக்கு ஒதுக்கி உள்ளனர். பல ஆண்டுகளாக நாங்கள் திமுக கூட்டணயில் உள்ளோம். இதனால் திமுக-வின் கோரிக்கையை ஏற்று 3 தொகுதிகளை ஏற்றுக் கொண்டோம்“ என்றார்.

  மேலும் தனிச்சின்த்த்தில் தேர்தலை சந்திப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “கேராளவில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் எங்கள் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கி உள்ளது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அதில் எந்த குழப்பமும் வேண்டாம்“ என்று தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: