TN Election Result 2021 Updates : திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலை
TN Election Result 2021 Updates : திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலை
கே.என்.நேரு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதன்படி தற்போது வரை திமுக கூட்டணி 133 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 99 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. திருச்சி திமுக வேட்பாளர்களான திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர். திருச்சி கிழக்கில் அதிமுக. வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவு சந்தித்துள்ளார்.
அதிமுக அமைச்சர்களில் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பின்னடவை சந்த்தித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.