அரசு கேபிள் டிவி கட்டணம் அதிரடி குறைப்பு

அரசு கேபிள் டிவி கட்டணம் அதிரடி குறைப்பு
  • Share this:
அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இதுவரை 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்து சுமார் 35.12 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தற்பொழுது தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் நீங்கலாக) வருகிற ஆகஸ்ட் 10, 2019 முதல் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.


வேலூர் தவிர்த்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும்.

First published: July 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்