Tamil News Live : மத்திய அமைச்சரவை மாற்றம்... புதிய அமைச்சர்கள் யார்?

Cabinet Reshuffle LIVE Updates: மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுகிறது. புதிய அமைச்சர்கலாக இடம்பெறப்போவது யார்? உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | July 07, 2021, 15:54 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 19 DAYS AGO

    AUTO-REFRESH

    19:51 (IST)

    எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு

    குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன், ஜோதிர்ராதித்ய சிந்தியா, சர்பானந்தா சோனாவல், விரேந்திர குமார் உள்ளிட்ட 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    19:44 (IST)

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,367 பேருக்கு கொரோனா உறுதி; 3,704 பேர் குணமடைந்த நிலையில் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 


    19:38 (IST)

    மத்திய அமைச்சராக பதவியேற்றார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    19:35 (IST)

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அமைச்சராக பதவியேற்றார்

    17:35 (IST)

    மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் ராஜினாமா 

    தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும்,மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.மொத்தம் 12 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
     புதிதாக பதவியேற்கவுள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளார். 

    17:24 (IST)

    17:20 (IST)

    “கொரோனா பெருந்தொற்றை கையாளுவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இணையமைச்சரின் ராஜினாமா காட்டுகிறது.இது அமைச்சர்களுக்கான பாடம், பாராட்டு என்றால் அது பிரதமரையே சாரும் ஆனால் ஏதேனும் தவறு நடந்தால், அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும். இதுவே அமைச்சர்கள் அவர்களின் கிழ்படிதலுக்கு கொடுக்கும் விலை” - ப.சிதம்பரம் ட்வீட்

    17:20 (IST)

    “கொரோனா பெருந்தொற்றை கையாளுவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இணையமைச்சரின் ராஜினாமா காட்டுகிறது.இது அமைச்சர்களுக்கான பாடம், பாராட்டு என்றால் அது பிரதமரையே சாரும் ஆனால் ஏதேனும் தவறு நடந்தால், அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும். இதுவே அமைச்சர்கள் அவர்களின் கிழ்படிதலுக்கு கொடுக்கும் விலை” - ப.சிதம்பரம் ட்வீட்

    16:50 (IST)

    மத்திய அமைச்சராக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டதை தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது- மத்திய அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.முருகனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து 

    16:37 (IST)

    புதிய அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு

    பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.புதிதாக பதவியேற்க உள்ள 43  மத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த மாநில பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளார்.