Tamil News Live : சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை - உயர்நீதிமன்றம் வேதனை

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | July 14, 2021, 16:37 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 MONTHS AGO

    AUTO-REFRESH

    16:39 (IST)

    புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி,உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தகவல். உயர் நீதிமன்றங்கள், இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காததால், வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

    16:39 (IST)

    நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

    16:34 (IST)

    வட கிழக்கு மாநிலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிவது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரேனா பரவல் 10 சதவிகிதத்திற்கும் அதிகமுள்ள 73 மாவட்டங்களில் 47 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. இதனையடுத்து மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணியலாமலும், சமூக இடைவெளி இன்றி சுற்றி திரிவதும் கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.மருத்துவ நிபுணர்கள் கூட்டம் கூடுவதற்கு எதிராக தொடர்ந்து எச்சரிக்கை விடுப்பதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் வந்துவிட்டு தானாக சென்று விடாது என எச்சரித்தார்.கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

    16:35 (IST)

    16:14 (IST)

    குழந்தை மித்ராவின் சிகிச்சைக்கான மருந்துக்கு வரி விலக்கு அளித்தற்கு நன்றி - வானதி ஸ்ரீநிவாசன் ட்விட்டரில் பதிவு 

    15:21 (IST)

    தமிழர் ஒருவர் உட்பட 5 இந்தியர்கள் ஈரானின் சபஹர் துறைமுகத்தில் சிக்கியுள்ளனர்.

    தமிழர் ஒருவர் உட்பட 5 இந்தியர்கள் ஈரானின் சபஹர் துறைமுகத்தில் சிக்கியுள்ளனர். தவறுதலாக போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் தாயகம் திரும்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். புகார் அளிப்பதால் ஏஜென்ஜி தங்களை மிரட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

    13:28 (IST)

    காவிரி குறுக்கே  அணை கட்ட புதுச்சேரி அரசு எதிர்ப்பு தடுத்து நிறுத்த பிரதமருக்கு கடிதம்

    காவிரியின் குறுக்கே மேகேதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசைப்போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை விசிக எம்.பி ரவிக்குமார் சந்தித்து மனு அளித்தார். 
    இந்த நிலையில் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி இன்று தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    காவிரியின் குறுக்கே மேகேதத்துவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும் என்பதை இக்கூட்டத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன் வைத்தார். காவிரி குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதுச்சேரி அரசு, அணை கட்டுவதால் காரைக்கால் விவசாயம் பாதிக்கும்.புதுச்சேரிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.அணை கட்டுவதை நிறுத்த பிரதமருக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் புதுச்சேரி அரசு சார்பில் கடிதம் எழுதுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    13:24 (IST)

    ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன...
    நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்..? கேட்கும்போதே தலைசுத்தது  - நடிகர் வடிவேலு

    12:38 (IST)
     
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்காக, இதுவரை 3 கோடி ரூபாய் வரை அரசு செலவு செய்தது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிப்பதற்காக, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ்கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என, 154 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

    2019ம் ஆண்டு இந்த வழக்கில், உரிய மருத்துவ குழுவை கொண்டு விசாரணை நடத்தவில்லை என, அப்பல்லோ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    இது ஒருபுறம் இருக்க, நான்கு ஆண்டுகளாகியும், ஆணையத்திலிருந்து எந்த தரவுகளும் வெளியிடப்படாத நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, இதுவரை 3 கோடி ரூபாய் வரை அரசு செலவு செய்துள்ளது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    12:25 (IST)