TamilNewsUpdate : சதுரகிரி மலைப்பகுதியில் திடீர் தீ - பக்தர்களுக்கு தடை

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | October 06, 2022, 18:38 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    18:36 (IST)

    சதுரகிரி மலைப்பகுதியில் திடீர் தீ  - பக்தர்களுக்கு தடை

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாளை பிரதோஷத்திற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    .

    17:27 (IST)

    ஓபிஎஸுடன் இணைந்து செயல்பட இனி வாய்ப்பில்லை - இபிஎஸ் திட்டவட்டம்!

    சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்கள் 100 சதவிகிதம் கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை. அதிமுகவில் இனி அவர்களுக்கு இடமில்லை; அதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

    16:36 (IST)

    2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

    2022ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு,  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அன்னீ எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    16:17 (IST)

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி : 40 ஓவராக குறைப்பு

    இந்தியா - தென் ஆப்பிரிக்க இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையால் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

    15:46 (IST)

    டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு : தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்!

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்கவிருந்தது. இந்நிலையில் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா முதலில் களமிறங்குகிறது.

    14:5 (IST)

    தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு : 23 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி

    தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 23 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    13:30 (IST)


    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் போட்டி தொடங்குவதில் தாமதம்!

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்கவிருந்தது. இந்நிலையில் மழை காரணமாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது