Tamil News Live : பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | July 16, 2021, 11:08 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 18 DAYS AGO

    AUTO-REFRESH

    18:4 (IST)

    நியூஸ்18நேரலையில் இணைந்ததற்கு நன்றி. இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகின்றது.

    17:55 (IST)

    பள்ளிகள் திறக்கப்படுமா? டெல்லி முதல்வர் பதில் 

    அனைவர்க்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் வரை  எவ்வித ரிஸ்க்கும் எடுக்க தயாராக இல்லை

    17:51 (IST)


     ஆந்திராவில் புதிதாக  2,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குணமடைந்து திரும்பியவர்கள்  2,933 பேர்.சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழப்பு

    17:50 (IST)

    காமராஜர் வலியுறுத்திய கல்வி,சுகாதாரம், பெண்ணுரிமை ஆகியவை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது - பிரதமர் மோடி ட்வீட்!

    17:49 (IST)

    டெல்லியில் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்


    17:47 (IST)

    தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும்.. வைரஸ் எதிர்ப்பாற்றலை முழுமையாக அளிக்காது: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெய் ஷா எச்சரிக்கை

    இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் 23 வீரர்களில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதையடுத்து ஜெய் ஷா இந்திய வீரர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.


    17:35 (IST)

    நூறு வயதிலும் இளைஞராகத் தான் செயல்படுகிறார் சங்கரய்யா - ராமதாஸ் வாழ்த்து

    மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு வயது என்பது ஓர் எண் தான் என்றும், நூறாண்டை காணும் தோழர் சங்கரய்யா இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும் எனவும் வாழ்த்துவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.


    17:33 (IST)

    விமான பயணிகளுக்கு குட் நியூஸ்... இனி இது தேவையில்லை

    இந்தியாவில் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட உள்நாட்டு பயணிகள் மும்பை விமான நிலையத்திற்குள் நுழையும் போது நெகட்டிவ் ஆர்டிபிசிஆர் அறிக்கைகளை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என மும்பை விமான நிலையம் அறிவித்துள்ளது.


    16:23 (IST)

    பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கின்றார் எடியூரப்பா 

    மேகதாது அணை கட்ட பிரதமர் மோடியை சந்தித்து மனு அளிக்க நாளை மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றார் எடியூரப்பா 

    16:14 (IST)

    கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் நினைவு நாளினை பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும்; பள்ளி தீ விபத்தால் காயமடைந்த நபர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை