குற்றால அருவிகளில் சிறிப் பாய்ந்து வரும் தண்ணீர் குளிக்க அனுமதி இல்லாததால் ஏங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள் விரையில் தடையை நீக்கி குளிக்க அனுமதிக்க வேண்டுகோள் .
தென்காசி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை துவங்கிய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும் இங்குள்ள பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்பரித்து வரும் தண்ணீரில் குளிக்க நாடெங்கிலும் இருந்து லட்சகணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல் இந்தாண்டும்2வது அலையால் தற்போது வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி இல்லாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.