Live: ஜன. 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | December 23, 2022, 16:10 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    18:17 (IST)

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்ஃபோனை காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதிக்க முடியாது என மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்

    16:8 (IST)

    ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு 

    1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறப்பு.

    மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி வகுப்புகள் தொடங்கும் - பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு.


    15:42 (IST)

    பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்; 16 வீரர்கள் உயிரிழப்பு

    வடக்கு சிக்கிமின் ஜெமா பகுதியில் ராணுவ வீரர்களுடன்  சென்ற ராணுவ வாகனம் இன்று பிற்பகல் விபத்தில் சிக்கியது. அதில் பயணித்த 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


    11:10 (IST)

    மூக்கு வழியாக கொரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல்!

    புத்தாண்டு கொண்டாட்டகளுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்கவுள்ள நிலையில், மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    19:19 (IST)

    பொதுமக்கள் முக கவசம் அணிய பிரதமர் மோடி வலியுறுத்தல்

    பொதுமக்கள் அனைவரும் அலட்சியம் வேண்டாம் என்று அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்

    பொதுமக்கள் மெத்தனம் வேண்டாம், கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

    18:10 (IST)

    ஆ. ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம்
     

    முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை விளக்கம்

    2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ரியல் எஸ்டேட் நிறுவனத்தி வாங்கிய லஞ்ச பணத்தில்  பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில்  ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை  தற்போது முடக்கியுள்ளது.

    17:39 (IST)

    மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின

     கொரோனா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய  முதலமைச்சர் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்