பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்; 16 வீரர்கள் உயிரிழப்பு
வடக்கு சிக்கிமின் ஜெமா பகுதியில் ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் இன்று பிற்பகல் விபத்தில் சிக்கியது. அதில் பயணித்த 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆ. ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம்
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை விளக்கம்
2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ரியல் எஸ்டேட் நிறுவனத்தி வாங்கிய லஞ்ச பணத்தில் பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது.
பி.எஃப்.7 ஒமிக்ரான் தொற்று பரவல் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த விரைவான துள்ளியமான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்!