Tamil news live updates: நாளை மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | October 04, 2022, 20:53 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 2 MONTHS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  20:53 (IST)

  நாளை மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

  அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் நாளை மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை சேர்ப்பதற்கு பள்ளியில் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  விஜயதசமி நாளை ஒட்டி நாளைய தினம் மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

  19:17 (IST)

  இந்தூரில் நடைபெறும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி

  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

  15:22 (IST)

  இயற்பியலுக்கான நோபல் பரிசு- 3 பேருக்கு அறிவிப்பு

  2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகியோருக்கு அறிவிப்பு

  15:22 (IST)

  இயற்பியலுக்கான நோபல் பரிசு- 3 பேருக்கு அறிவிப்பு

  2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகியோருக்கு அறிவிப்பு

  13:13 (IST)

  புதுச்சேரி - கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் விடுதலை

  புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து மின்துறை பொறியாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். போராட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது மின் ஊழியர்கள் சிலர் தற்காலிகமாக மின் நிறுத்தம் ஏற்படுத்தியதாக 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

  இந்நிலையில் போராட்டம் முதலமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு தீபாவளி வரை போரட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

  12:15 (IST)

  மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றத்தழுத்த தாழ்வு பகுதி- தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 04.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

  05.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

  06.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  11:36 (IST)

  மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் மீட்பு

  தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாய்லாந்து வழியாக மியான்மருக்கு பணிக்காக சென்றவர்களை சிறை பிடித்து வைத்து சித்திரவதை செய்வதாக தமிழ்நாடு அரசிற்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. 

  அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு மியான்மரில் சிக்கியுள்ள 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார். தற்போது தமிழக அரசின் முயற்சியால் 13 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று சென்னை அழைத்து வரப்படுகின்றனர். 

  10:48 (IST)

  கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக செல்லும் இரசாயன நுரைகள்

  கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரில் இரசாயன நுரைகள் குவியல் குயிலாக பொங்கி செல்கிறது.

  10:21 (IST)

  MBBS, BDS கலந்தாய்வு தேதி அறிவிப்பு

  நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் & இதர மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு அக்டோபர் 11 முதல் கலந்தாய்வு

  மாநிலங்கள் அக்டோபர் 17-ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வை தொடங்கலாம்

  அக்டோபர் 17 முதல் 28-ம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வை மாநிலங்கள் நடத்தலாம்

  நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15-ல் தொடங்கும்