ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

ஐ மேக்ஸ் தியேட்டரில் பொன்னியின் செல்வன் பார்த்த தமிழக ஆளுநர்!

ஐ மேக்ஸ் தியேட்டரில் பொன்னியின் செல்வன் பார்த்த தமிழக ஆளுநர்!

தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பார்த்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தார்.

  லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

  tamil box office collection 2022, highest day 1 collection in tamil nadu 2022, top 10 first day collection in tamil movies 2022, highest box office collection in tamil nadu day 1, tamil movie box office collection records, 100 crore club tamil movies 2022, highest grossing tamil movies, top 10 chennai box office collection all time, ponniyin selvan, ponniyin selvan collection, beast collection, valimai collection, kgf2 collection, vikram collection, பொன்னியின் செல்வன் வசூல், வலிமை வசூல், பீஸ்ட் வசூல், விக்ரம் வசூல், கேஜிஎஃப் வசூல்

  இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 163 கோடி வசூலித்திருப்பதாகவும், அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா வசூல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலக அளவில் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 750 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

  அதே போல் இரண்டாவது இடத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடியை கடந்துள்ளது.

  Also Read: உலகளவில் கொட்டும் வசூல்! அம்மாடியோவ் சொல்லவைக்கும் பொன்னியின் செல்வன் கலெக்‌ஷன்!

  பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்று திரையிடப்பட்டு வருகிறது. இந்த படம் வெளியான பிறகு ராஜராஜ சோழன் இந்து கிடையாது என்ற வாதம் எழுந்தது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேளச்சேரியில் உள்ள பிரபல திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தார்.

  அவரை அந்த திரையரங்கத்தின் சி.இ.ஓ விவேக் வரவேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீப காலமாக அவர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளில் தமிழ் கலாச்சாரம் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில் சோழர்கள் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அவர் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Ponniyin selvan