Tamil latest News: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்:தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து!

Today News Tamil - Live Updates: இன்றைய தினம் நடக்கும் நாட்டு நிகழ்வுகள், கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 24, 2021, 18:05 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    15:57 (IST)

    ரிலையன்ஸின் ஒவ்வொரு ஊழியரும் தேசிய கடமை உணர்வோடு செயலாற்றினார்கள் - முகேஷ் அம்பானி

    ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, ஒவ்வொரு ரிலையன்ஸ் ஊழியரும் தேசிய கடமை உணர்வோடு செயலாற்றியதாக கூறினார்.கொரோனாவுக்கு எதிரான போரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியரும் பங்கெடுத்தனர். ரிலையன்ஸ் நிறுவனமும் அதன் அனைத்து ஊழியர்களும் நோக்கம் மற்றும் தேசிய கடமை உணர்வுடன் செயலாற்றினார்கள் என தெரிவித்தார்.


    15:53 (IST)

    தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக, நாடு முழுவதும் 109 நகரங்களில் 116 தடுப்பூசி மையங்களை அமைத்துள்ளோம் - நீட்டா அம்பானி


    15:51 (IST)

    ரிலையன்ஸ், கொரோனா காரணமாக வேலைகள், சம்பளங்கள், போனஸ் போன்ற எதுவும் குறைக்கப்படவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்தோம். அனைத்து மருத்துவ செலவுகளும் முழுமையாக வழங்கப்பட்டன. - நீட்டா அம்பானி

    15:50 (IST)

    இந்தியாவில் 11 சதவீதத்திற்கும் மேலான மருத்துவ ஆக்சிஜனை ரிலையன்ஸ் உற்பத்தி செய்கிறது - நீட்டா அம்பானி

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44 வது ஆண்டு  பொதுக்கூட்டத்தில் பேசிய நீட்டா அம்பானி,  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) தற்போது இந்தியாவின் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜனில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்து வருகிறது. இது ஒரு நிறுவனத்தால் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்படுவதில் அதிகபட்சமாகும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 10 கொரோனா நோயாளிகளில் ஒருவருக்கு ஆக்சிஜன் இலவசமாக வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    15:34 (IST)

    ரிலையன்ஸ் குழுமத்தின் 44-வது பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உரை

    15:29 (IST)

    கூகுள் கிளவுட் சேவைகளை ஜியோ பயன்படுத்தும் - முகேஷ் அம்பானி 

    15:28 (IST)

    தொடர்ந்து 2வது ஆண்டாக நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பினை இழந்திருக்கிறேன் - ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி 


    15:24 (IST)


    ரிலையன்ஸும் , கூகுள் நிறுவனமும் இணைந்து மலிவு விலையில் 4 ஜி போன் அறிமுகம்  - முகேஷ் அம்பானி 

    15:21 (IST)

    செப்டம்பர் 10ம் தேதி முதல் 'ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகம்' - முகேஷ் அம்பானி