Tamil latest News : தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்

Today News Tamil - Live Updates: இன்றைய தினம் நடக்கும் நாட்டு நிகழ்வுகள், கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 29, 2021, 19:24 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    22:56 (IST)

    கொரோனா அச்சம் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படாமல் புதிய கணக்கீட்டு முறையில் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழ் நாடு அரசு அறிவித்த நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    22:55 (IST)

    குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டர் பொருத்தப்பட்ட குடிநீர் இணைப்பைக் கண்டறிந்து குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

    20:54 (IST)

    கடந்த 24 மணி நேரத்தில்  118பேர்  கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை  32,506 ஆக உயர்ந்துள்ளது.   மேலும், 6,013 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பியதையடுத்து,  சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை  40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 39,335 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.


    19:20 (IST)

    தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்


    18:48 (IST)

    முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு போலீஸ் காவல் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரி இருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

    17:53 (IST)

    இந்தியாவில் இதுவரை 51 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி-மத்திய சுகாதாரத்துறை


    16:21 (IST)

    16:20 (IST)

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு.ஒரு கிராம் ரூ.4,430, சவரன் ரூ.35,440 க்கும் விற்பனை.


    15:46 (IST)

    கொடுத்த பணத்தை கேட்டு வந்தவரை கட்டிபோட்டுவிட்டு தப்பி ஓடிய கணவன்-மனைவி 

    சென்னை துரைப்பாக்கம் சக்தி நகரில் வாடகை வீட்டில் நிர்மல்குமார்(33) அவருடைய மனைவி விஷ்னுபிரியா(28) இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஹரிகிருஷ்ணன் என்பவரிடம் பல லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்ற பணத்தை கொடுக்காமல் கணவன் மனைவி இருவரும் ஹரிகிருஷ்ணனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    ஹரிகிருஷ்ணன் நண்பரான விருகம்பாக்கத்தை சேர்ந்த லயன்.எம்.எம்.குமார் துரைப்பாக்கத்தில் உள்ள நிர்மல்குமார் வீட்டிற்கு பணத்தை கேட்டு கடந்த 27ம் தேதி சென்றுள்ளார். அப்பொழுது லயன்.எம்.எம்.குமாரை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அவரை தாக்கி வீட்டில் கட்டிபோட்டு விட்டு அவரிடமிருந்த ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப்பணம், 8 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். 

    கணவன்-மனைவி வீட்டிலிருந்து தப்பி ஓடியதும் கட்டிபோடப்பட்ட லயன்.எம்.எம்.குமார் கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட லயன்.எம்.எம்.குமார் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கணவன் மனைவி மீது புகார் அளித்ததை தொடர்ந்து பணம் நகையுடன் தலைமறைவாக உள்ள கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    14:1 (IST)