Latest Tamil News :மதுரையில் இடி மின்னலுடன் கனமழை - நகரின் பல இடங்களில் மின்தடை

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | July 01, 2021, 20:26 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 2 YEARS AGO

  AUTO-REFRESH

  20:25 (IST)

  மதுரையில் இடி மின்னலுடன் கன மழை - நகரின் பல இடங்களில் மின்தடை

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

  அதன்படி இன்று மதுரையில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் கருமேகக் கூட்டம் சூழ்ந்தது. பின்னர் தற்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

  மதுரை மாநகரில் மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், அண்ணாநகர், தெப்பக்குளம், முனிச்சாலை, விளக்குத்தூண், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், திருநகர், திருப்பரங்குன்றம், அய்யர்பங்களா, மூன்றுமாவடி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி - மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

  இந்த மழையினால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. முனிச்சாலை, அண்ணா நகர், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் மக்களின் இயல்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

  20:24 (IST)

  19:13 (IST)

  அண்ணாத்த படம் தீபாவளி அன்று நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.


  16:53 (IST)

  16:5 (IST)

  மதுரை தனியார் காப்பகத்தில் இருந்த இரண்டு குழந்தைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில் குழந்தைகளை விலைக்கு வாங்கிய இரண்டு தம்பதிகள் மற்றும் காப்பக நிர்வாகி ஒருவர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

  அவர்கள் 5 பேரும் தற்போது கொரோனா பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

  இதனை தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

  15:27 (IST)

  குழந்தைகளுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசி பரிசோதனை வேண்டாம் : சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு குழு எதிர்ப்பு

  குழந்தைகளுக்கு கோவவாக்ஸ் தடுப்பூசி சோதனையை நடத்த வேண்டாம் என சீரம் நிறுவனத்திற்கு, மத்திய அரசு குழு கூறியுள்ளது. அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இங்கு கோவோவாக்ஸ் எனும் பெயரில் தடுப்பூசி தயாராகிறது. செப்டம்பரில் இந்த தடுப்பூசியை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள சீரம் நிறுவனம், ஜூலை மாதம் குழந்தைகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த திட்டமிட்டது. இந்த நிலையில், 2 முதல் 17 வயதுடையவர்களுக்கு கோவோவாக்ஸ் பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும், முதலில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான சோதனையை முடிக்குமாறும் மத்திய அரசு குழு கூறியுள்ளது.


  15:25 (IST)

  ஆண்டுதோறும் காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை : அசாம் மாநில அமைச்சரவை முடிவு

  அசாமில் ஆண்டுதோறும் காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை தொடர்ந்து காவலர்களும் முன்கள பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், அசாம் மாநிலத்தில் உதவி ஆய்வாளர் தரவரிசையில் வரை இருக்கும் காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் Pijush Hazarika கூறியுள்ளார். குடும்பத்துடன் தங்காமல் வேலை பார்க்கும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு மாதம் விடுப்பு வழங்கப்படும் என்றும், காவலர் குடியிருப்புகளில் குடும்பத்தினருடன் இருப்பவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


  15:23 (IST)

  சதுரங்க போட்டியில் 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் சாதனை

  செஸ் விளையாட்டு போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன், 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹங்கேரி தலைநகர் Budapest-ல் உலக கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த leon luke mendonca எனும் 15 வயது சிறுவனை வீழ்த்தி அபிமன்யு வெற்றி கண்டார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசிக்கும் அபிமன்யு மிஸ்ரா, Budapest-ல் பல மாதங்கள் தங்கியிருந்து சதுரங்க போட்டிக்கான தொடர்களில் விளையாடியுள்ளார். இதற்கு முன்பு 2002-ல் ரஷ்யாவைச் சேர்ந்த sergey karjakin, தனது 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருந்தார், தற்போது 12 வயது 4 மாதங்களில் முந்தைய சாதனையை அபிமன்யு முறியடித்துள்ளார்.


  15:21 (IST)

  கிராமத்திற்குள் உலா வரும் ஒற்றை காட்டுயானை: ஆபத்தை உணராமல் யானையை பின்தொடரும் மக்கள

  ஒடிசா மாநிலம் Mayurbhanj அருகே கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது. மேற்கு வங்கத்தில் வனப்பகுதியிலிருந்து வந்த காட்டுயானைகள் கூட்டத்திலிருந்து, இந்த ஒற்றை யானை பிரிந்திருப்பதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். தற்போது அங்குள்ள கோபபந்துநகர் பகுதிக்குட்பட்ட இடத்தில் காட்டுயானை சுற்றி வருகிறது. ஆனால் கிராம மக்களில் சிலர், ஆபத்தை உணராமல் யானையை பின்தொடர்ந்து செல்போனில் படம் எடுத்து வருகின்றனர். யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

  15:20 (IST)

  முதலமைச்சரின் காரை நிறுத்தி புத்தகத்தை பரிசளித்த சிறுமி

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி சிறுமி ஒருவர் அளித்த புத்தகத்தை பரிசாக பெற்றுக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவில்லத்தில் மரியாதை செலுத்துவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக காஞ்சிபுரம் வந்த அவரை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது வழக்கறுதீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த இளையராஜாவின் 11 வயது மகள் தீபலட்சுமி தனது கையில் வைத்திருந்த புத்தகத்தை காண்பித்து தளபதி, தளபதி என்று கூச்சலிட்டார். இதனை கவனித்த முதலமைச்சர் தனது காரை நிறுத்தி சிறுமி பரிசளித்த புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.