Latest Tamil News : திருச்சியில் 8 இடங்களில் நாளை தடுப்பூசி முகாம்

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | June 30, 2021, 19:13 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 4 MONTHS AGO

  AUTO-REFRESH

  19:11 (IST)


  திருச்சி மாநகராட்சிக்குட்பட் பகுதிகளில் ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம், கோ அபிசேகபுரம் என 4 கோட்டங்களில் தலா 2 இடங்கள் என மொத்தம் 8 இடங்களில் நாளை காலை 9 மணியளவில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்.ஒவ்வொரு இடத்திற்கும் தலா 400 என மொத்தம் 3, 200 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  16:56 (IST)

  15:1 (IST)

  பழனி அரசு மருத்துவமனையில் கொரோனா பரவல் நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களை பாராட்டும் வகையில் பிரியாணி வழங்கப்பட்டது

  14:59 (IST)

  ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு டோக்கியோவில் ஒலிம்பிக் ஜோதி முத்தமிடும் நிகழ்வு நடைபெற்றது. 

  ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் 47 நகரங்களில் வகையில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக சகாமிஹாரா நகரில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் ஜோதி ஓட்ட நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதற்கு பதிலாக நகரின் ஒவ்வொரு பகுதியிலும் மேடை அமைத்து, ஜோதியை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் ஒலிம்பிக் ஜோதிகள் முத்தமிடும் நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.


  14:59 (IST)

  ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு டோக்கியோவில் ஒலிம்பிக் ஜோதி முத்தமிடும் நிகழ்வு நடைபெற்றது. 

  ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் 47 நகரங்களில் வகையில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக சகாமிஹாரா நகரில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் ஜோதி ஓட்ட நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதற்கு பதிலாக நகரின் ஒவ்வொரு பகுதியிலும் மேடை அமைத்து, ஜோதியை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் ஒலிம்பிக் ஜோதிகள் முத்தமிடும் நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.


  14:55 (IST)

  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

  இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்புத்துறைக்கான வருங்கால சவால்கள் குறித்தும், அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்புத்துறைக்கு நவீன உபகணரங்களை வாங்குவது, ராணுவத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஜம்மு விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சீன எல்லைக்கு, இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 50 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டது பற்றி, பிரதமரிடம் அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.


  14:51 (IST)

  நயன்தாரா குறித்து மேதகு பட இயக்குநர் கிட்டுவின் சர்ச்சைப் பதிவு

  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறை ‘மேதகு’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார் கிட்டு என்பவர். இவர் சாதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், நயன்தாரா குறித்தும் மோசமாக விமர்சித்திருப்பது தெரிய வந்துள்ளது.நயன்தார விக்னேஷ் சிவனை காதலிக்கும் முன்பு சிம்பு, பிரபுதேவாவுடன் காதலில் இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். நயன்தாராவும் அதனை மறைத்ததில்லை. அந்தப் புகைப்படங்களை கீதையின் வாசகத்துடன் இணைத்து கிட்டு முன்பு பதிவிட்டிருந்தார். பெண்கள் குறித்த மேதகு படம் எடுத்தவரின் பார்வை இப்படித்தான் உள்ளது என பலரும் அந்தப் பதிவை பகிர, உடனடியாக தனது சமூகவலைதள கணக்கை பிளாக் செய்துள்ளார்.


  13:40 (IST)

  பாமாயில் மீதான சுங்க வரியை குறைத்தது மத்திய அரசு - சந்தையில் விலை குறைய வாய்ப்பு....

  கச்சா பாமாயில் மீதான சுங்க வரியை 10 சதவிகிதமாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 15 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியை, விலை உயர்வை கருத்தில் கொண்டு குறைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாமோலின் மற்றும் பாம் ஸ்டீரின் ஆகியவற்றின் மீதான, இறக்குமதி வரி 45 சதவிகிதத்தில் இருந்து 37.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வரிக்குறைப்பு அறிவிப்பானது, வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாமாயில் மீதான வரிக்குறைப்பின் மூலம் சில்லறை வர்த்தகத்தில் விலை குறைந்து, பொதுமக்கள் பயனடைவர் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.


  13:35 (IST)

  கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மண்ணுளி பாம்பை கடத்திய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

  கேரள மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு மண்ணுளி பாம்புகள் கடத்தப்படுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த காரை சோதனை செய்த போது 2 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பை கடத்தி வந்தது தெரியவந்தது. பாம்பினை மீட்ட வனத்துறையினர், ஜோஸ் வில்பர்ட், பிரசாந்த், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.


  13:33 (IST)

  ரேசன் கார்டு தரவுகள் திருட்டு : ஹேக்கர்கள் அட்டூழியம்

  தமிழக அரசு பொது வினியோகத் திட்டத்தின் இணையதளத்தை ஹேக் செய்து, அதிலிருந்து முக்கியமான தரவுகளை ஒரு கும்பல் திருடியுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் 2 கோடி ரேசன் கார்டுகளை அண்மையில் அரசு ஸ்மார்ட் கார்டாக மாற்றியது.
  அப்படி மாற்றப்பட்டதால், பயனீட்டாளர்களின் ஆதார், செல்போன், முகவரி ஆகியவை TNPDS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.பொது வினியோகத் திட்டத்தின் தரவுகள், புள்ளிவிபரங்களை பதிவு செய்வது, ஹேக்கிங் உள்ளிட்ட சட்டவிரோத தாக்குதலில் இருந்து காக்கும் பணிகளை தமிழக அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்துள்ளது.இந்த நிலையில், பிளாக் நெட் எனப்படும் இணையத்தில், பொது வினியோகத் திட்டத்தின் தரவுகள் விற்பனை உள்ளதை மும்பையைச் சேர்ந்த சேவ்தெம் இந்தியா பவுண்டேசன் அமைப்பினர் கண்டுபிடித்தனர்.இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சிவில் சப்ளை சிஐடி ஆகிய பிரிவில் அந்த அமைப்பினர் புகார் அளித்தனர். தரவு திருட்டு குறித்து யாரும் அச்சப்படத்தேவையில்லை என்றும், ரேசன் பயனீட்டாளர்களின் தரவுகள் பத்திரமாக உள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.