Latest Tamil News (June 12) :சென்னையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது..

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | June 12, 2021, 16:35 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 2 MONTHS AGO

  AUTO-REFRESH

  20:29 (IST)

  திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் வெள்ளி நீர் வீழ்ச்சி சோத‌னை சாவ‌டியில்இன்று இ-பாஸ் பெறாம‌ல் வ‌ரும் வெளி மாவ‌ட்ட‌ ம‌ற்றும் வெளி மாநில‌ வாக‌ன‌ங்க‌ளின் வ‌ருகை இர‌விலும் தொட‌ர்வ‌தால் போலீசாரால் திருப்பி அனுப்ப‌ப்ப‌ட்டுவ‌ருகின்ற‌து.

  19:35 (IST)

  டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து பாஜக சார்பில் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்பொழுது தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம் நடத்த உள்ளது.

  பாஜக தலைவர்கள் கொரோனா காரணமாக அவர்களின் வீடுகளிலேயே போராட்டம் நடத்த உள்ளனர்.

  பாஜக தலைவர் எல்.முருகன் நாளை காலை கட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்த உள்ளார்.

  18:30 (IST)

  துறைமுகம்,கிழக்கு கடற்கரைசாலை,ராஜ்பவன்,வில்லியனூர்,பாகூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

  18:4 (IST)

  கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேவையான மருந்துகள், சில மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.

  16:27 (IST)


  சென்னை திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு,  புதுவண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை,
  ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர், திரு.வி.க.நகர்  மணலி, மாதவரம் மற்றும் பல  பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. 

  13:0 (IST)

  தடுப்பூசி போட டோக்கன் பெறுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண் உயிரிழப்பு. 

  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் தடுப்பூசி போட வந்த வள்ளிகண்ணு(40) என்ற பெண் உயிரிழப்பு. இந்த மையத்திற்கு தடுப்பூசி வருவது காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் காலை 7 மணி முதல் வரிசையில் நின்றுள்ளனர். இதனால் அப்பெண் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

  13:0 (IST)

  2வது அலையில் குறைந்த கொரோனா பாதிப்பு 

  நெல்லையில் 2வது அலையில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு 99 ஆக குறைந்துள்ளது.நெல்லை மாவட்டத்தில் நேற்று 1967 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2வது அலையில் முதல் முறையாக 100க்கு கீழ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

  12:58 (IST)

  முதல்வரின் டெல்லி பயணத்தில்  தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க கோரிக்கை வைப்பார். - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 

  11:54 (IST)

  பொறியியல் மாணவர் சேர்க்கை குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்படும் - அமைச்சர் பொன்முடி

  11:54 (IST)

  9 மாவட்டங்களில் 65 .01 கோடி மதிப்பில் 647 பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் 4,061 கி.மீ தூரம் காவிரி ஆற்றில் தூர்வாரப்படும் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்