ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் அந்த நாடும் நாட்டு மக்களும் அனுபவித்து வரும் கடும் அச்சுறுத்தல்களையும் துன்பங்களையும் மறுத்து தாலிபான்கள் ‘பாசிட்டிவ் மைண்ட்’ உடன் வந்திருக்கின்றனர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரீடி கூறப்போய் நெட்டிசன்களிடம் வகையாகச் சிக்கினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி கூறியது: “தாலிபான்கள் நல்ல பாசிட்டிவ் மனநிலையில் வந்திருக்கின்றனர். பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதிக்கின்றனர். தாலிபான்கள் கிரிக்கெட்டை நேசிக்கின்றனர்” என்று கூறியுள்ளார். நல்ல மனநிலையில் தாலிபான்கள் வந்திருக்கின்றனர் என்று அவர் கூறியது நெட்டிசன்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பே காபூல் விமானநிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பெண்களுக்கு சுதந்திரம் பற்றி நிருபர் ஒருவர் கேட்ட போது அவர்களைப் பார்த்து சிரித்து ‘கேமராவை ஆஃப் பண்ணு’ என்று சொன்னவர்கள்தான் இந்தத் தாலிபான்கள்.
Also Read: India vs England| முன்னின்று வழிநடத்தியது போதும் கோலி.. பின்னாலிருந்து இயக்குங்கள்: டபிள்யூ.வி.ராமன் அட்வைஸ்
இஸ்லாமிய சட்டத்தின் படி என்ன சுதந்திரம் உண்டோ அது அளிக்கப்படும் என்று அவர்கள் வெளிப்படையாக கூறிய பின்பும், ஷாகித் அப்ரீடி அவர்கள் நல்ல மனநிலையில் வந்துள்ளனர், சுதந்திரம் அளிப்பார்கள் என்று கூறியதையடுத்து நெட்டிசன்கள் பலர் கொந்தளித்து ‘ஓகோ அடுத்த பிரதமர் நீங்கள்தான் அப்ரீடி” என்று சாட்டையடி கொடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.