• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • அணியில் காலி இடங்களே குறைவு, அனைவரையும் எப்படி சேர்க்க முடியும்?- அதிருப்தியாளர்களுக்கு கோலி பதில்

அணியில் காலி இடங்களே குறைவு, அனைவரையும் எப்படி சேர்க்க முடியும்?- அதிருப்தியாளர்களுக்கு கோலி பதில்

யஜுவேந்திர செகல்

யஜுவேந்திர செகல்

இந்திய டி20 உலகக்கோப்பை அணி தேர்வு செய்யும் போது அஸ்வின் வேண்டாம் யஜுவேந்திர செகல்தான் வேண்டும் என்று வலியுறுத்திய விராட் கோலி ராகுல் சாகரை ஏன் எடுத்தோம் என்பதைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரில் செகல் 15 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை சாய்த்தார். இவர் இந்திய உலகக்கோப்பை அணியில் இல்லை என்பதற்குக் காரணம் என்னவெனில் செகல் மிகவும் மெதுவாக வீசுகிறார் அது யுஏஇ பிட்ச்களுக்கு சரிப்பட்டு வராது என்பதே. ராகுல் சாகர் கொஞ்சம் வேகமாக வீசக்கூடியவர். ஆனால் செகலை தேர்வு செய்யாதது கடினமான ஒரு முடிவுதான் என்கிறார் கோலி.

    இது தொடர்பாக கோலி அளித்த பேட்டியில், “அது ஒரு சவாலான நீக்கம்தான், ஆனால் ராகுல் சாகரைத் தேர்வு செய்ய முடிவெடுத்தோம். இதற்குக் காரணம் இருக்கிறது கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக அவர் வீசினார். கொஞ்சம் வேகமாக லெக் ஸ்பின்னை வீசக்கூடியவர். இலங்கையில் சமீபமாக ஆடியபோதும் சாகர் சிறப்பாகவே வீசினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் ஆடியபோது கடினமான ஓவர்களை வீசியது சாகர்தான். இந்த உலகக்கோப்பையில் பிட்ச்கள் போகப்போக மந்தமாகிக் கொண்டே போகும் என்று உணர்கிறோம் எனவே இங்கு கொஞ்சம் வேகமாக ஸ்பின் போட்டால் எடுபடும் எனவே அத்தகைய பவுலிங்கை உடைய ராகுல் சாகரைத் தேர்வு செய்தோம்.

    ஐபிஎல் தொடரில் பின்பகுதியில் நாம் பார்த்தோம், பேட்ஸ்மென்களைத் திணற அடித்த பவுலர்கள் கொஞ்சம் வேகமாக வீசக்கூடியவர்களே. பந்தை பிளைட் செய்யாதவர்கள்தான் சிறப்பாக வீசினர். ராகுல் சாகர் ஸ்டம்ப்புகளுக்குள் வீசக்கூடியவர். அவர் பிட்ச் செய்யும் இடங்கள் நமக்கு விக்கெட்டுகளைப் பெற்றுத்தரக்கூடியதாகும்.

    இதையும் படிங்க: T20 World Cup 2021:வங்கதேச அணியைப் பார்சல் செய்த அமேசான் பார்சல் டெலிவரி ஊழியர் கிறிஸ் கிரீவ்ஸ்

    இதுதான் ராகுலை செகலை விட அதிகம் விரும்பிய காரணமாகும். அதற்காக செகலை குறை சொல்லவில்லை, செகலும் சிறப்பாகவே வீசினார். அவரை விட்டது கடினமான முடிவே, உலகக்கோப்பை அணித்தேர்வு என்றால் சாதாரணமா? இருக்கும் இடங்களோ குறைவு அனைவரையும் எப்படி அணியில் எடுக்க முடியும்?” என்று கோலி கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: