ஹோம் /நியூஸ் /Live Updates /

சொந்த ஊர் குழி பிட்ச் தாதாக்கள் பூஜ்ஜியம்- அதிரடி சேசிங்கில் 38 பந்துகளில் வங்கதேசத்தை துடைத்து எறிந்த ஆஸ்திரேலியா

சொந்த ஊர் குழி பிட்ச் தாதாக்கள் பூஜ்ஜியம்- அதிரடி சேசிங்கில் 38 பந்துகளில் வங்கதேசத்தை துடைத்து எறிந்த ஆஸ்திரேலியா

வங்கதேசத்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா.

வங்கதேசத்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா.

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக எல்லா அணிகளையும் சொந்த ஊருக்கு அழைத்து குழிப்பிட்சில் அந்த அணிகளைத் தள்ளி மூடிய வங்கதேசம் 2021 டி20 உலகக்கோப்பையில் யுஏயில் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து மண்ணைக்கவ்வி சரியான தண்டனை பெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

2021 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இதற்கு முன்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் வங்கதேச அணியைத் தட்டித்தூக்க நேற்று ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்ப்பா 5 விக்கெட்டுகளை 19 ரன்களுக்குக் கைப்பற்ற நாகின் டான்ஸ் வங்கதேசம் 15 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து அடிய ஆஸ்திரேலியா 6.2 ஓவர்களில் 78/2 என்று அபார வெற்றி பெற்றது. ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் இரு அணிகளுக்கு இடையே இவ்வளவு பந்துகள் மிச்சம் வைத்த் எந்த அணியும் வெற்றி பெற்றதில்லை. இந்த ஆண்டில் வங்கதேசம் 4வது முறையாக 100 ரன்களுக்கும் கீழ் அவுட் ஆகியுள்ளது.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி தொடக்கத்தில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜாஷ் ஹேசில்வுட் வீசியது என்னவென்றே வங்கதேச பேட்டர்களுக்கு புரியவில்லை. பிறகு ஆடம் ஜாம்ப்பா வந்தார் வென்றார், டெய்ல் எண்டர்களை வரிசையாக வீட்டுக்கு அனுப்பினார். ஸ்டார்க் முதலில் 3 யார்க்கர்களை வீசினார் லிட்டன் தாஸ் இதில் ஒன்றில் பவுல்டு ஆனார்.

சவுமியா சர்க்கர் பிளேய்ட் ஆன் ஆகி ஜாஷ் ஹேசில்வுட் பந்தில் வெளியேறினார். கிளென் மேக்ஸ்வெலிடம் வங்கதேச நம்பிக்கை நட்சத்திரம் முஷ்பிகுர் ரகீம் எல்.பி.ஆனார். 10/3. பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் ஹேசில்வுட் பந்தை புல் ஆடுகிறேன் என்று நயீம் கேட்ச் ஆனார். பிறகு அனைத்தும் ஜாம்ப்பா மயம். முதல் பந்திலேயே ஆஃபிப் ஹுசைனை கூக்ளியில் எட்ஜ் ஆக்கி வெளியேற்றினார்.

ஜாம்ப்பா இதே பாணியில் மேலும் 2 விக்கெட்டுகளை சாய்த்தார், மேத்யூ வேட் ஒரு கேட்சைப்பிடித்திருந்தால் ஹாட்ரிக் அடித்திருப்பார். அதே ஓவரின் 4 மற்றும் 6வது ஓவரில் வங்கதேசத்தை சப்ஜாடா ஒழித்து விட்டார் ஜாம்ப்பா. வங்கதேச அணியில் 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கம் எட்டினர், தொடக்க வீரர் நயீம், கேப்டன் மகமுதுல்லா. ஷமிம் ஹுசைன் இரட்டை இலக்கம் எட்டினர்.

ஆஸ்திரேலியா அதிரடி சேசிங்!

நெட் ரன் ரேட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு கீழ் இருந்த ஆஸ்திரேலியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்து நெட் ரன் ரேட்டை எகிறச்செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு முதல் ஓவரில் தெரியவில்லை, 4 ரன்கள் மட்டுமே வந்தது.

ஆனால் அதன் பிறகு ஆரோன் பிஞ்ச் வெளுத்துக் கட்டினார். 4, 6, பிறகு முஸ்தபிசுர் பந்தை பிள்க்கில் சிக்ஸ், டஸ்கினை தூக்கி எக்ஸ்ட்ரா கவரில் அடித்தது என்று பிஞ்ச் அபாயகரமாக ஆடினார், டேவிட் வார்னரும் 4வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார்.

ஏரோன் பிஞ்ச் 20 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்கள் என்று 40 ரன்கள் எடுத்தும் வார்னர் 14 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 18 ரன்கள் என்றும் அடிக்கப் போய் பவுல்டு ஆகி வெளியேறினர். பவர் ப்ளே முடிவில் 6 ஓவர் 67/2. அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ், டஸ்கின் அகமதுவை அடுத்த ஓவரிலேயே மிட் ஆப் மேல் ஒரு பவுண்டரி அடித்தார், பிறகு ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட் மேல் பெரிய சிக்ஸ் விளாசி 38 பந்துகளில் பினிஷ் செய்தது ஆஸ்திரேலியா. ஆட்ட நாயகன் ஆடம் ஜாம்ப்பா.

வங்கதேசத்துக்கு அழைத்து எந்த ஒரு அணிக்குமான எந்த ஒரு மரியாதையையும் அளிக்காமல் லீக் மேட்ச்களுக்குக் கூட லாயக்கற்ற குண்டு-குழிப்பிட்ச்களைப் போட்டு பயணம் மேற்கொள்ளும் அணிகளை தங்கள் நாட்டு வெற்றிப்பித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தி போலியாக வென்ற வங்கதேசத்துக்கு அதன் உண்மை முகத்தை இந்த உலகக்கோப்பை காட்டியுள்ளது, வங்கதேச அணிக்குக் கண்ணாடி காட்டப்பட்டுள்ளது, இனியாவது ஒழுங்கான பிட்ச்களைப் போட்டு போலி வெற்றிகளைத் தவிர்த்து உண்மையான தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் வங்கதேசம் ஃபைட் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

சொந்த குழிப்பிட்ச் வெற்றிகளை பெரிதாக நினைத்து தன் கொம்பையே சீவி விட்டுக்கொண்டு வெளியே வந்தால் அடக்கப்படும் என்பதை உணர வேண்டும்.

Published by:Muthukumar
First published:

Tags: T20 World Cup