முகப்பு /செய்தி /Breaking and Live Updates / வணங்கான் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்… சூர்யா ரசிகர்கள் உற்சாகம்…

வணங்கான் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்… சூர்யா ரசிகர்கள் உற்சாகம்…

வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தின் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். நடிகை மமிதா பைஜூ முக்கிய கேரக்டரில் இப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

வரவேற்பைப் பெறும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்…. ஒரே நாளில் 25 லட்சம் வியூசை தாண்டியது

ஜி.வி. பிரகாஷ்குமார் வணங்கான் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வணங்கான் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதாவது இந்த படத்தின் பாடல்கள் தற்போது ரிக்கார்டு செய்யப்பட்டு வருவதாக ஜி.வி. பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.

அவரது இந்த அப்டேட் ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளது. சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படம் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சூர்யா  42 படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடிய ஜெயம் ரவி…

சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். தேவிஸ்ரீபிரசாத் சூர்யா 42 படத்திற்கு இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு நவம்பரில் சூர்யா 42 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Suriya