சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்! முடிவை மாற்றிய மு.க.ஸ்டாலின்

மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, மாநிலம் முழுவதும் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, ஸ்டெர்லைட், நீட் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்கட்சிகள் எழுப்பவுள்ளன. 

news18
Updated: June 28, 2019, 10:30 AM IST
சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்! முடிவை மாற்றிய மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
news18
Updated: June 28, 2019, 10:30 AM IST
மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிறகு, தமிழக சட்டப்பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பரபரப்பான சூழலுக்கு மத்தியில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய பேரவைக் கூட்டத் தொடர், மறைந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி, அ.தி.மு.க உறுப்பினர் கனகராஜ் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பிறகு, அவரை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


வரும் திங்கட்கிழமை முதல் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று, அதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, மாநிலம் முழுவதும் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, ஸ்டெர்லைட், நீட் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்கட்சிகள் எழுப்பவுள்ளன.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று கடிதம் அளித்துள்ளோம். அதற்கான சூழல் இப்போது இல்லை’ என்று தெரிவித்தார்.

Also see:

Loading...

First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...