பழைய நடைமுறையே தொடரும் - தெற்கு ரயில்வே பொது மேலாளர்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

news18
Updated: June 14, 2019, 2:07 PM IST
பழைய நடைமுறையே தொடரும் - தெற்கு ரயில்வே பொது மேலாளர்
கோப்புப்படம்
news18
Updated: June 14, 2019, 2:07 PM IST
நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற அறிவிப்புக்கு, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது தெற்கு ரயில்வே

கடந்த மார்ச் 9ஆம் தேதி மதுரை திருமங்கலத்தில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டதற்கு கட்டுப்பாட்டு அறைகள் இருந்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மொழிப் பிரச்னையே காரணம் என கூறப்பட்டது.

இதனை அடுத்து, இரண்டு அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ரயில்வே சுற்றறிக்கை


அந்த அறிக்கையில், கோட்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ளும் போது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும், பிராந்திய மொழிகளில் பேசும் போது புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளி்ல் பேசுவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் நிலைய அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
Loading...


திமுக எம்.பி தயாநிதி மாறன் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார். மேலும், அலுவலகத்தின் முன் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தயாநிதி மாறன் மனு


இந்நிலையில், சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.
First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...