• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • ஸ்பைடர் மேன் படங்களைத் தயாரிக்கப் போவதில்லை: மார்வெல் அறிவிப்பால் கொதித்த நெட்டீசன்கள்

ஸ்பைடர் மேன் படங்களைத் தயாரிக்கப் போவதில்லை: மார்வெல் அறிவிப்பால் கொதித்த நெட்டீசன்கள்

வருமானத்தை பகிர்வதில் சோனி நிறுவனத்துடன் முரண்பாடு

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்பைடர் மேன் வரிசையிலான திரைப்படங்களை இனி தயாரிக்கப் போவதில்லை என்று மார்வெல் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வித்தியாசமான தோற்றத்தில் திரையில் வரும் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்தநிலையில், இந்த திரைப்படத்தை தயாரிக்கும் குழுவில் இருந்து விலகுவதாக மார்வெல் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

ஸ்பைடர் மேன் திரைப்படங்களின் மூலம் பெறப்படும் வருமானத்தை பகிர்வதில் சோனி நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்படாததால் மார்வெல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. மார்வெல் நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல் ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் இனி வெளியாவதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள், இதை வன்மையாக கண்டித்து வருகின்றனர். இதுவரை வெளியான ஸ்பைடர்மேன்களிலேயே டாம் ஹாலந்து நடித்திருக்கும் அதுவும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இருப்பதுதான் நன்றாக இருக்கிறது அதனால் இதை தொடர வேண்டும் என்று குறிப்பிட்டு #SaveSpiderman என்ற ஹேஸ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.













Also see... தனுசுடன் மோதலா? மனம் திறக்கும் ஜி.வி.பிரகாஷ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: