ஹோம் /நியூஸ் /JUST NOW /

என் நண்பன் பாலு மீண்டு வருவான், காத்திருக்கிறேன் - பாரதிராஜா

என் நண்பன் பாலு மீண்டு வருவான், காத்திருக்கிறேன் - பாரதிராஜா

எஸ்.பி.பி - பாரதிராஜா

எஸ்.பி.பி - பாரதிராஜா

SP Balasubrahmanyam | கொரோனா பாதித்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டுமென்று இயக்குனர் பாராதிராஜா ட்விட் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, தனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்காக பிரார்த்திக்குமாறு நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ள நிலையில், துக்கம் மனதை பிசைகிறது என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார்.

இதேபோல், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், தினா, தமன், இயக்குநர் ஹரி, நடிகர்கள் பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்டோரும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து நலம் பெற வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும், நடிகைகள் குஷ்பூ, ராதிகா பிரபல இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூர், பாடகி சின்மயி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோரும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து நலம் பெற வேண்டும் என்றும், அதற்காக பிரார்த்திக்குமாறும் பதிவு செய்துள்ளனர்.

இதேப்போன்று இயக்குனர் பாரதிராஜாவும் எஸ்.பி.பாலசுப்பரமணியம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டு வருவார் என்று ட்வீட் செய்துள்ளார்.

பாரதிராஜா தனது ட்வீட்டில், என் நண்பன் பாலு மீண்டு வருவான், காத்திருக்கிறேன் என்றுள்ளார்.

First published:

Tags: Bharathiraja, S.P.Balasubramaniyam