BREAKING காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி!

BREAKING காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி!
சோனியா காந்தி
  • Share this:
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சோனியாகாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அவரே தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த ராகுல்காந்தி, கட்சி தனக்கான தலைவரை தானே தேர்வு செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடியது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பொதுச்செயலாளர் பிரியங்காந்தி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மாநிலவாரியாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. மேற்கு, கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் தெற்கு பகுதிவாரியாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டன.


கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய சோனியாகாந்தி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் தானும், ராகுல்காந்தியும் பங்கேற்கவில்லை என கூறினார். மாநிலவாரியான குழுக்களின் ஆலோசனை முடிவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இடைக்கால தலைவராக சோனியாகாந்தி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published: August 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading