ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி வாக்காளர் அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாற்றான் படம் நினைவிருக்கலாம். உடலால் ஒட்டிப் பிறந்த இரட்டையராக அப்படத்தில் அவர் நடித்திருப்பார். பொதுவாக ஒரே முகத் தோற்றத்துடன் கூடியவர்களை ஐடெண்டிகல் ட்வின்ஸ் அல்லது இரட்டையர் என அழைக்கிறோம். இவர்கள் உடலால் தனித்தனி நபர்கள். இவர்களை போலவே, உடலால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களும் இருக்கிறர்கள். இவர்கள் conjoined twins அல்லது Siamese twins என அழைக்கப்படுகிறார்கள்.
கருவுறும் கால நடைமுறையில் ஏற்படக்கூடிய குறைபாட்டினால் இது ஏற்படுவதாகவும், இதனை மிகவும் அரிதான நிகழ்வாகவும் மருத்துவத்துறையினர் வர்ணிக்கின்றனர். இவர்கள் உடலால் ஒன்றாகவும், உயிரால் இரண்டாகவும் இருக்கின்றனர். இதைப் போன்ற ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் வாழ்வியலை மையமாக வைத்தே சூர்யாவின் மாற்றான் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

Actor Surya
Also read: 2021 உலகளாவிய ஊழல் குறியீடு: இந்தியா முன்னேற்றம் - பாகிஸ்தானுக்கு கடும் சரிவு..
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த சோகன் சிங் மற்றும் மோகன் சிங் ஆகிய சகோதரர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாவர். இவர்களை Sohna-Mohna என பலரும் செல்லமாக அழைக்கின்றனர். 2003ம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர்கள், பெற்றோரால் கைவிடப்பட்டதால் அமர்தசரசில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த இரட்டையருக்கு 18 வயது பூர்த்தி ஆனது. இருவரும் வாக்களிக்கும் வயதை எட்டியதால் இருவருக்கும் தனித்தனி வாக்காளர் அடையாள அட்டையை மாநில தேர்தல் ஆணையம் தந்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையர் கருணா ராஜு, Sohna-Mohnaவிற்கு புகைப்படத்துடன் கூடிய இரண்டு தனித்தனி வாக்காளர் அடையாள அட்டையை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து தந்திருக்கிறார். இவர்கள் இருவரும் எதிர்வரும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தங்கள் வாக்கை செலுத்த இருக்கிறார்கள்.
Also read: பத்மபூஷன் விருதை புத்ததேப் பட்டாச்சார்யா ஏற்க மறுத்தது உண்மையா? - மாறுபட்ட தகவலால் குழப்பம்..
இருவருக்குமான தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளித்து இருவரும் தனித்தனியாக வாக்களிக்க ஏதுவாக விஷேச ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கருணா ராஜூ தெரிவித்தார்.
117 தொகுதிகளை உள்ளடக்கிய பஞ்சாப் மாநிலத்துக்கு வரும் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.