ஒவ்வொரு வாரமும் புதுப்புது வகையான கேட்ஜெட்கள் வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்போன் முதல் சிறிய அளவிலான கேட்ஜெட் வரை இதில் அடங்கும். இந்திய சந்தையில் இந்த மாதம் 180W வாட் அதிவேகமான சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளது என்கிற அறிவிப்பு வந்துள்ளது. நீண்ட நேரம் மொபைலில் சார்ஜ் இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். வாடிக்கையாளர்களின் இந்த ஆசையை நிறைவேற்ற இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 20 ஆம் தேதி இது குறித்த நிகழ்வுடன், பெரிய வெளியீட்டை இன்பினிக்ஸ் நிறுவனம் தரவுள்ளது.
ஜீரோ அல்ட்ரா 5ஜி வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவுள்ளது. இதன் பின்புறத்தில் 200 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 180W வேகமான சார்ஜிங் வசதியையும் பெறுகிறது. இதுவரை இப்படியொரு ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் சந்தையில் வந்ததில்லை. இதுவே முதன்முறை என்று இன்பினிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த புது வகை ஸ்மார்ட்போனில் 3D 120Hz AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 6.8 இன்ச் திரை அளவைக் கொண்டுள்ளது மற்றும் முழு HD+ தெளிவுத்திறனை வழங்குகிறது. இதில் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் உடன் OIS ஆதரவுடன் வருகிறது. மேலும், இதில் 200 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும் கொண்டுள்ளது. இந்த ஃபோனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தி உள்ளனர்.
Also Read : ஓரே ஒரு ரீசார்ஜில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ்கால், இலவச ஒடிடி சேவை... ஜியோ, ஏர்டெல் அசத்தல் பிளான்ஸ்
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 920 சிப்செட் மூலம் இயங்குகிறது. மற்ற இன்பினிக்ஸ் போன்களை போன்றே இதிலும் microSD ஸ்லாட்டை கொடுத்துள்ளனர். இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12 வெர்ஷனில் இயங்குகிறது. மேலும், இதில் USB போர்ட், சார்ஜிங் போர்டு மற்றும் பேட்டரி ஆகியவற்றின் வெப்பநிலையை கண்காணிக்க சார்ஜிங் தொழில்நுட்பமும், வெவ்வேறு சென்சார்களை பெற்று வரும் என இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் பேட்டரியை பொறுத்த வரையில், விரைவாக சார்ஜ் குறைவதை உறுதிசெய்ய, ஃபோனின் வெப்பநிலையை 43 டிகிரிக்கு முன்னதாக வைத்திருக்க பரிந்துரைக்கிறது.
இன்பினிக்ஸ் தற்போது அறிமுகப்படுத்த உள்ள இந்த சார்ஜரை தண்டர் சார்ஜ் என்று அழைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 180W சார்ஜிங் வசதியுடன் 4500mAh பேட்டரியை பெறுகிறது.வெறும் 5 நிமிடங்களுக்குள் 100 சதவீதம் வரை உங்களுக்கு சார்ஜிங் ஆகிவிடும். தற்போது இந்தியாவில் அதிவேக சார்ஜிங் என்றால் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தான் முன்னணியில் இருக்கும்.
Also Read : சூப்பரா இருக்கே.. பட்ஜெட் விலையில் பக்காவான நோக்கியா ஸ்மார்ட்போன்.!
இன்பினிக்ஸ் பெரும்பாலும் பட்ஜெட்குள் அடங்கும் மொபைல்களை வெளியிட்டு வருகிறது. மற்றும் இடைப்பட்ட சாதனங்களில் கவனம் செலுத்தும் ஒரு பிராண்டாக இருந்து வருகிறது. இந்நிறுவனம் 20,000 ரூபாய்க்கு குறைவான அளவில் ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கும், மேலும் இதன் விலையும் பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.