ஹோம் /நியூஸ் /Live Updates /

உக்ரைனில் பள்ளி மீது ரஷ்யா தாக்குதல் - 60 பேர் மரணம் என தகவல்

உக்ரைனில் பள்ளி மீது ரஷ்யா தாக்குதல் - 60 பேர் மரணம் என தகவல்

நன்றி - AFP

நன்றி - AFP

பள்ளியில் 90க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த நிலையில், 60க்கும் மேற்ப்பட்டோர் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ரஷ்யா படைகள் உக்ரைனில் போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு பள்ளி ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் ரஷ்ய படைகள் வீசிய குண்டு அங்குள்ள பள்ளி ஒன்றில் விழுந்துள்ளது. இந்த பள்ளியில் 90க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த நிலையில், 60க்கும் மேற்ப்பட்டோர் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

  இது தொடர்பாக அம்மாநில ஆளுநர் ஷெர்ரி கைய்டாய் கூறியதாவது, 'பள்ளி கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க நான்கு மணிநேரம் போரட வேண்டியிருந்தது. அங்கு மீட்பு பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறோம். 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மீதமுள்ள 60 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் அபாயம் நிலவுகிறது' என்றார். பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், இதுவரை அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய மோசமான தாக்குதல் இதுவே.

  இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மற்றும் பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநா சபை பொது செயலாளர் ஆன்டனியோ குவாட்ரெஸ் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் பொது மக்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக தொடர்ந்து புகார் எழும் நிலையில் இதற்கு ரஷ்ய அரசு மறுப்பு தெரிவித்துவருகிறது.இந்நிலையில், உக்ரைனின் மரியபோல் நகரில் உள்ள பொது மக்களை மீட்கும் பணி ஒருவரத்திற்கு பிறகு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த மீட்பு பணியில் ஐநா சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை உதவின. இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாதிமோர் செலன்ஸ்கியை ஜி 7 நாட்டின் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி ஆதரவு தெரிவித்தனர்.

  இதையும் படிங்க: இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே

  அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் அன்மையில் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். மேலும், உக்ரைனுக்கு உதவியாக 1.6 பில்லியன் டால் நிதி அளிக்க இந்நாடுகள் உறுதியளித்துள்ளன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Russia - Ukraine, War