ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

கூட்டம் கூட்டமா குடும்பங்கள் வரும்.. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு இப்படி ஒரு ப்ளஸா?

கூட்டம் கூட்டமா குடும்பங்கள் வரும்.. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு இப்படி ஒரு ப்ளஸா?

பிரின்ஸ்

பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது

  டான் திரைப்படத்தை தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமிழக இளைஞனுக்கும் UK பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் குறித்து நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்.

  படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

  இந்த திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியிருந்தனர்.  படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் பிரின்ஸ் திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  இதனால் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பத்தோடு இப்படத்தைப் பார்க்கலாம் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 23 நிமிடம் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடையே, தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு  கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.  இந்தப் படங்களுக்கான புரமோஷன் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

  அத்துடன் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் கடைசி இரண்டு திரைப்படங்களும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களில் வெற்றி அடைந்தன.

  இதனால் அவர்கள் நடித்துள்ள சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Sivakarthikeyan