சிவகங்கை மாவட்டம் மானா
மதுரை அருகே முதியவர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாயின் இறப்பை தாங்க முடியாமல் அதற்கு சிலை வடித்து வாரம்தோறும் பூஜை செய்துவருவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பிரமானக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முதியவர் முத்து. இவர் சமூக நலத்துறையில் தன் பணியை முடித்துவிட்டு ஓய்வு பெற்றவர். செல்லப்பிராணியாக நாய் ஒன்றுக்கு ஷாம்குமார் என பெயரிட்டு கிட்டதட்ட கடந்த 11 ஆண்டுகளாக மிக பாசமாக வளர்த்து வந்தள்ளார்.
ஒரு நாள் உடல்நலக்குறைவால் நாய் இறந்து விட்டது. இந்த சோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் நாய் நினைவாக முத்து இருந்து உள்ளார். நாயை தனது வீட்டின்அருகில் அவர் புதைத்து உள்ளார். ஆனால் வீட்டின் அருகே கோவில் கட்ட இடம் பற்றக்குறை காரணமாக புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பிடிமணல் எடுத்து வந்து தனது விவசாய நிலத்தில் தனது வளர்ப்பு நாயின் உருவத்தை அப்படியே தத்துபருமாக சிலையாக வடித்தார். இந்த நாயின் சிலை அதிக விலை கொடுத்து மகாபலிபுரத்தில் செய்யப்பட்டது.
தற்போது 80 வயதிலும் வெள்ளி செவ்வாய் தவறாமல் பூஜை செய்து வணங்கி வருகிறார். உயிரோட்டமாக இருக்கும் இந்த நாயின் சிலை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களை ஈர்த்துள்ளது. மனிதர்களுக்கு இடையேயான பந்தங்களையே சுமையாக பலர் கருதும் இந்த காலத்திலும் தனது வளர்ப்பு நாய்க்கு சிலை வைத்து ஆச்சரியப்பட வைத்துள்ள முத்துவின் செயலுக்கு அக்கிராம மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.