ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார்: மைக்கேல் வான் உறுதி

ஷுப்மன் கில்.

புஜாரா முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடினார். நீண்ட காலத்துக்கு கட்டுக்கோப்பாக ஆடுவதுதான் முக்கியம். இந்த வாரத்தில் இந்தியாவிடம் இந்தத் தன்மைதான் இல்லை.

 • Share this:
  சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் சரிவுதான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

  முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்டிங் சரியாக இல்லை இதுதான் தோல்விக்குக் காரணம் என்று கூறுகிறார் மைக்கேல் வான்.

  சென்னை டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இப்போதைக்கு முதலிடம் பிடித்ததோடு ரூட் தலைமையில் 6 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்துள்ளது.

  இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இந்திய அணி தோல்வி பற்றி கூறியதாவது:

  இந்தியா தோல்வியடைந்ததில் பாசிட்டிவாக பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் ஒரு இந்திய பேட்ஸ்மென் கூட தங்கள் சொந்த மண்ணில் சதம் எடுக்கவில்லை. கடைசியாக எப்போது இப்படி நடந்திருக்க வாய்ப்பு என்பதை என்னால் நினைவுகூர முடியவில்லை.

  விராட் கோலி கொஞ்சம் பார்முக்கு வந்துள்ளார், இது அவருக்கும் இந்திய அணிக்கும் நல்லது. ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் அட்டகாசமாக ஆடினார். ஷுப்மன் கில், இவர் உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதில் ஐயமில்லை.

  புஜாரா முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடினார். நீண்ட காலத்துக்கு கட்டுக்கோப்பாக ஆடுவதுதான் முக்கியம். இந்த வாரத்தில் இந்தியாவிடம் இந்தத் தன்மைதான் இல்லை.

  இது பந்து வீச்சிலும் இல்லை, பேட்டிங்கிலும் இல்லை. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் இந்திய அணி கடுமையாக உழைக்கவில்லை. கடைசியில் 4 விக்கெட்டுகள் தூக்கி எறியப்பட்டன, முதல் இன்னிங்ஸில் ஷாட்களை சரியாகத் தேர்வு செய்யவில்லை இந்திய அணி. இதனாலதான் இங்கிலாந்து அணி நம்பிக்கை பெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 450 ரன்களை எடுத்திருக்க வேண்டும்.

  அப்படி எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கே வேறுமாதிரி போயிருக்கும். 2வது இன்னிங்ஸில் இந்தப் பிட்சில் ஆடுவது கடினம். டாப் 5 வீரர்களில் அதிகபட்ச ஸ்கோர் 73 என்பது இந்திய அணிக்கு நன்மை பயப்பதல்ல.

  இவ்வாறு கூறினார் மைக்கேல் வான்.

  மைக்கேல் வான் கூறுவதில் பெரும்தவறு உள்ளது இந்திய பேட்ஸ்மென்களில் யாரேனும் சதம் எடுத்திருந்தால் தோல்வியை தவிர்த்திருக்க முடியுமா? சதமா பிரச்சனை? சாலையாக அமைந்த பிட்ச்தான் பிரச்சனை. முதல் 2 நாட்களுக்கு நன்றாக இருந்தது, அதன் பிறகு குண்டும் குழியுமாக மாறியது என்ன செய்வது?
  Published by:Muthukumar
  First published: