ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர் பரிசுத் தொகை ரூ.20 லட்சத்தைப் பெறுவதற்காக நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தன் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்ட அம்ஷிபுராவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த என்கவுன்ட்டரில் இம்தியாஸ் அகமது, அஃப்ரார் அகமது, முகமது இப்ரார் என்ற மூன்று இளைஞர்கள் பயங்கரவாதிகள் என்ற அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் ரூ.20 லட்சம் பரிசுத் தொகைக்காக நடத்தப்பட்ட போலி என்கவுண்ட்டர் என்று குற்றப்பத்திரிகையில் பரபரப்பாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது போலி என்கவுன்ட்டர் என்றும் இந்த இளைஞர்களுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் கேப்டன் தன் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் போலீஸார் மாவட்ட தலைமை மேஜிஸ்ட்ரேட்டிடம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ராணுவ கேப்டன் புபேந்தர் போலி என்கவுண்ட்டர் நடத்தியதாக பரபரப்பு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கேப்டன் புபேந்தர் குழுவில் இடம்பெற்றிருந்த வீரர்கள், கரு ராம், ரவி குமார், அஷ்வினி குமார், யோகேஷ் ஆகியோரது பெயர்களும் போலி என் கவுண்ட்டர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக பிலால் அகமது லோன் தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
கேப்டன் புபேந்தர் இப்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ராணுவ நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fake Encounter, Jammu and Kashmir