• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம் - டெல்லி வன்முறை பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம் - டெல்லி வன்முறை பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

  • Share this:
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு திங்கட்கிழமை தொடங்குகிறது.

    கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற்றது.

    இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, மார்ச் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், டெல்லி வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக 42 பேர் உயிரிழக்க காரணமான டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: