பள்ளியில் ஆசிரியர் முட்டிப் போட வைத்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை...

சஞ்சீவை கண்டித்த ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் மைதானத்தில் முட்டிப்போட வைத்ததாகவும், தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து சென்று மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 31, 2019, 9:25 PM IST
பள்ளியில் ஆசிரியர் முட்டிப் போட வைத்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை...
ஆசிரியர் முட்டி போட வைத்ததால் மாணவர் தற்கொலை
Web Desk | news18
Updated: July 31, 2019, 9:25 PM IST
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் முட்டி போட வைத்ததால் 8-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்மிபாளையத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் சக்திவேலின் மகன் சஞ்சீவ் பெரும்பாளியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், நேற்று பள்ளி நேரத்தில் புத்தகத்தில் படம் வரைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சீவை கண்டித்த ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் மைதானத்தில் முட்டிப்போட வைத்ததாகவும், தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து சென்று மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், வீட்டிற்கு வந்த சஞ்சீவ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை வருகின்றனர்.

Also watch: கமிஷனர் பெயரில் மோசடி செய்த இளைஞர்!

Loading...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...